29.2 C
New York
Wednesday, August 5, 2026

2003ஆம் ஆண்டின் கோடைகால வெப்ப சாதனையை முறியடிக்கிறது 2026 கோடை வெப்பம்.

2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம், 2003-ஆம் ஆண்டின் கோடைக்கால வெப்ப சாதனையைப் போல அல்லது அதைவிட அதிகமான வெப்பமாக இருந்துள்ளது.

கூட்டாட்சி வானிலை மற்றும் காலநிலை ஆய்வு அலுவலகமான மெட்டியோஸ்விஸ், இதனைத் தெரிவித்துள்ளது.

​​சில நிலையங்களில் வெப்பமான நாட்களின் எண்ணிக்கை ஏற்கனவே 2003-ஆம் ஆண்டை விட அதிகமாகிவிட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.

“2003 ஒரு தீவிரமான விதிவிலக்காக இருந்தது. புவி வெப்பமயமாதல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் இப்போது அதிகமாக நிகழ வாய்ப்புள்ளது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலமும் ஒரு விதிவிலக்கானதாகவே வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அது மேலும் கூறியது.

இந்த இரண்டு கோடைக்காலங்களும் பல வெப்ப அலைகளால் வகைப்படுத்தப்பட்டன. 2003-ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்தில் வெப்பமான சூழல் நிலவியதைப் போலல்லாமல், இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே அளவீட்டு நிலையங்கள் தினசரி அதிகபட்ச வெப்பநிலைக்கான புதிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளன என்று மெட்டியோஸ்விஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டை ஒட்டுமொத்தமாகப் பற்றிய ஒரு திட்டவட்டமான மதிப்பீட்டைச் செய்வதற்கு இன்னும் காலம் கனியவில்லை.

இருப்பினும், பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2026 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று மெட்டியோஸ்விஸ் எதிர்பார்க்கிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles