28.5 C
New York
Wednesday, August 12, 2026

ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் பேர்ண் நகர் நடமாடும் சேவை

ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை எதி

ர்வரும் 29 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய திகதிகளில் ‘Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern’ என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

கால அவகாசம் குறைவாக உள்ளமையினால் , இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் www.lankamission.org/mcs என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் , தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை www.lankamission.org/checklist என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.

See less

Related Articles

Latest Articles