25.4 C
New York
Thursday, August 13, 2026

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் தனது முதலாவது தெற்காசிய பிராந்திய விஜயத்தை மேற்கொள்ள தயார்

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் தனது முதலாவது தெற்காசிய பிராந்திய விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

அந்த விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவேந்தலில் ஆக்னஸ் காலமர்ட் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 24ஆம் திகதி நேபாளத்தின் காத்மாண்டுவில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், இளைஞர் சமூகம் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles