23.4 C
New York
Monday, August 31, 2026

அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி தாக்குதல்-வளைகுடாவில் மீண்டும் பதற்றம்.

ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்காவும், அமெரிக்க தளங்கள் மீது ஈரானும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

- Advertisement -

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் பணியில் ஈரானிய படைகள் ஈடுபட்டதை அடுத்து  இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அவற்றில் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டானியப் படைகள் தெரிவித்துள்ளன.

ராக் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், 2 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 2 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவித்துள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை, இதற்குப் பதிலடியாக அமெரிக்க தளங்களை தாக்கியதாக அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles