-3.5 C
New York
Tuesday, December 24, 2024

நாடு முழுவதும் சிவப்பு லிப்ஸ்டிக்கிற்கு தடை

அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா கடுமையான மற்றும் நூதன சட்டங்களுக்கு பெயர் போனது. அந்நாட்டில் வ்வப்போது, உலகளவில் பிரபலமான ஃபேஷன் மற்றும் அழகுசாதனப் பிராண்டுகளுக்கு கூட தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் சிவப்பு வண்ண லிப்ஸ்டிக்கிற்கு வட கொரியா அரசு தடை விதித்துள்ளது.

சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தாலும், வட கொரியா சிவப்பு வண்ண லிப்ஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது.

ஏனெனில், அந்நாட்டு தலைமை அதனை கம்யூனிஸ கருத்துக்களாக கருதவில்லை மாறாக முதலாளித்துவத்தின் அடையாளமாக கருதுகிறது. அதேசமயம், அதிகமான மேக்-அப் வட கொரியாவில் வெறுக்கப்படுகிறது. அது, மேற்கத்திய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது.

அத்துடன், சிவப்பு லிப்-ஸ்டிக் போட்டிருக்கும் பெண்கள் கவர்ச்சியாக இருப்பதாகவும், அதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செல்லக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு கருதுகிறது. எனவே, சட்டத்தின்படி பெண்கள் குறைந்தபட்ச ஒப்பனை செய்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

வட கொரியாவின் தனிப்பட்ட தோற்றத்தின் மீதான கட்டுப்பாடு சிவப்பு லிப்-ஸ்டிக்கிற்கு அப்பாற்பட்டது. இதற்கு முன்பு, முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல பொருட்களுக்க்கு கிம் ஜாங் உன் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, ஸ்கினி மற்றும் நீல நிற ஜீன்ஸ், உடலில் ஏதாவது குத்திக் கொள்வது, நீளமான முடி போன்ற சில சிகை அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிகை அலங்காரங்கள் செய்து கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதேசமயம், சித்தாந்த ரீதியான தடைகளை விட தனிப்பட்ட வகையிலான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சில தகவல்களின்படி, கறுப்பு நிற ட்ரெஞ்ச் கோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன்னின் சிகை அலங்காரம் போல மற்றவர்கள் செய்து கொள்ளக் கூடாது, ஏனெனில் நாட்டு மக்கள் தன்னை நகலெடுப்பதை அவர் விரும்பவில்லை என்கிறார்கள். இத்தகைய கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்கும் பொருட்டு அவர்களை கண்காணிக்க பேஷன் போலீஸும் அந்நாட்டில் உள்ளது.

Related Articles

Latest Articles