சூரிச்சின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜோசப்ஸ்ட்ராஸ்/ஹாஃப்னர்ஸ்ட்ராஸ் பகுதியில் இடம்பெற்ற பணியிட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும், மற்றொருவர் உயிரிழந்ததாகவும் சூரிச் நகர காவல்துறை நேற்று மாலை உறுதிப்படுத்தியது.
- Advertisement -

இந்த விபத்தினால் போக்குவரத்துகள் மாற்றியமைக்கப்பட்டதுடன் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டது.
மூலம்- bluewin


