சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லேயின் இரண்டு நிறுவனங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் ஆணையில், நெஸ்லே ரஷ்யா மற்றும் நெஸ்லே குபான் ஆகியவற்றின் பங்குகள் இனி ரஷ்ய நிறுவனமான LEV மேனேஜ்மென்ட் மூலம் நிர்வகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பிரெஞ்சு பல்பொருள் அங்காடி சங்கிலியான ஆச்சானுக்கும் பொருந்தும்.

நெஸ்லே அதன் துணை நிறுவனங்களின் உரிமையாளராகத் தொடர்ந்தாலும், தற்போதைக்கு இந்த பங்குகள் தொடர்பான முடிவுகளை அதனால் எடுக்க முடியாது.
ஓகஸ்ட் மாதம், ரஷ்ய நிறுவனமான KS லொஜிஸ்டிகா, நெஸ்லேயின் ஐந்து ரஷ்ய துணை நிறுவனங்களை வெளி நிர்வாகத்தின் கீழ் வைக்குமாறு புடினிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று நெஸ்லே கூறியது.
ரஷ்யாவிலிருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்றும் அந்தநிறுவனம் மேலும் கூறியது.
நெஸ்லே தனது குழுமத்தின் மொத்த வருவாயில் சுமார் 2%-ஐ ரஷ்யாவில் ஈட்டுகிறது. இந்த நிறுவனம் ரஷ்யாவில் ஆறு உற்பத்தித் தளங்களை இயக்குகிறது, அங்கு அது கோப்பி, மிட்டாய் வகைகள், குழந்தை உணவு மற்றும் செல்லப்பிராணி உணவு உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது.
மூலம்- swissinfo


