13.2 C
New York
Thursday, April 24, 2025

இராணுவத் தளபதிக்கு சார்பாக யூடியூப் சனல் மீது தடை உத்தரவு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு எதிராக அவதூறான தகவல்களை வெளியிடுவதையும் தொடர்பு கொள்வதையும் தடுக்கும் வகையில், யூடியூப் சனல் ஒன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் 24 (1) மற்றும் பிரிவு 24 (2) ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவத் தளபதிக்கு ஆதரவாக நிபந்தனையுடன் கூடிய இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவை பிரதிவாதிகளான லங்கா V news-YouTube அலைவரிசை மற்றும் அதன் உரிமையாளர் துஷார சாலிய ரணவக்கவுக்குத் தெரிவிக்குமாறும் நீதிவான் பணித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், தனக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான காணொளி உள்ளடக்கங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிகள் பதிவேற்றியதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். 

சட்டப் பிரிவு 24(6)ன் கீழ் காரணத்தைக் காட்டும்படி பதில் தரப்புகளுக்கு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Articles

Latest Articles