13 C
New York
Thursday, April 24, 2025

பிரித்தானியாவில் நகர மேயரான ஈழத்தமிழர்!

ஈழத் தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர், பிரித்தானியாவின் Ipswich Borough நகர மேயராக தெரிவாகியுள்ளார்.

பிரித்தானியாவின் தொழிற் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும், இளங்கோ இளவழகன் என்ற ஈழத் தமிழரே, Ipswich Borough நகரசபையின் கூட்டத்தில் மேயராக ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

“இந்த பெரிய நகரத்தின் மேயராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Ipswich Borough நகரிலுள்ள இந்துக்கள், புதன்கிழமை மாலை இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டதுடன், வாரத்தின் இறுதியில் அருகிலுள்ள கோயிலில் கொண்டாட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் பிரித்தானியாவில் முதல்முறையாக மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை Ipswich Borough நகரின் பன்முகத்தன்மையையும் பன்முக கலாச்சாரத்தையும் காட்டுகிறது என Ipswich இந்து சமாஜத்தின் தலைவர் சச்சின் கராலே தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் வாழ்ந்து பணி செய்து பிரித்தானியாவில் புகலிடம் தேடினார். ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள Ilfordக்கு குடிபெயர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் Ipswichஇல் குடியேறினார்.

Related Articles

Latest Articles