10.3 C
New York
Saturday, October 10, 2026

பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.

சுவிட்சர்லாந்தில், புதிய தூதரகத்தை நிறுவ இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனாவின் செங்டு நகரில் 2016-ஆம் ஆண்டு மூடப்பட்ட தூதரகம் மீண்டும் திறக்கப்படும், கசகஸ்தானின் அஸ்தானா மற்றும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் ஆகிய நகரங்களில் புதிய தூதரகங்கள் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல்ஜி.டி. சூரியபண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.

பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இருதரப்பு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல், சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தூதரக ரீதியான தேவைகளை நிவர்த்தி செய்தல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles