14.4 C
New York
Friday, October 16, 2026

சுவிட்சர்லாந்தின் சிறந்த பட்டர் பாண் எது? மக்களின் வாக்கெடுப்பில் முதலிடம் பிடித்த துர்காவ் பேக்கரி

துர்காவ் மாநிலத்தில் உள்ள Mohn பேக்கரி தயாரிக்கும் பட்டர் சோஃப் (Butterzopf) சுவிட்சர்லாந்தின் சிறந்த பாண் என வாசகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சூரிச் மற்றும் ஆர்காவ் மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் சிறந்த பாண் தொடர்பாக சர்வதேச உணவு வழிகாட்டியான TasteAtlas வெளியிட்ட தரவரிசையில், சுவிஸ் பாண் 99ஆவது இடத்தைப் பெற்றிருந்தமை பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் மிகவும் சுவையான பாண் தயாரிக்கும் பேக்கரி எது என்பதை அறியும் நோக்கில் வாசகர்களிடம் கருத்துகள் கோரப்பட்டன.

- Advertisement -

இதற்குப் பதிலளித்த நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த பேக்கரிகளைப் பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில், துர்காவ் மாநிலத்திலுள்ள Bäckerei Confiserie Mohn முதலிடத்தைப் பெற்றுள்ளது. சூரிச் மாநிலத்தைச் சேர்ந்த Bäckerei-Conditorei Fleischli மற்றும் ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த Mammi’s Catering ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

1894ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குடும்ப நிறுவனம்

1894ஆம் ஆண்டு Berg பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட Mohn பேக்கரி, தற்போது Sulgen பகுதியில் தனது பிரதான தயாரிப்பு நிலையத்தைக் கொண்டுள்ளது. மேலும் Berg, Güttingen, Kreuzlingen மற்றும் Weinfelden ஆகிய இடங்களில் கிளைகளையும் கஃபேக்களையும் நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தில் வாரந்தோறும் சுமார் 2,300 சோஃப் வகைகள் பல்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. நிறுவனத்தின் பட்டர் சோஃப், Swiss Bakery Trophy போட்டியில் ஏற்கனவே ஐந்து முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதாக அதன் உரிமையாளர் ரோஜர் மோன் தெரிவித்துள்ளார்.

சுவையின் ரகசியம் என்ன?

தங்களது சோஃப் தனித்துவமான சுவையையும் மென்மையையும் கொண்டிருப்பதற்கான காரணங்களை நிறுவன உரிமையாளர் விளக்கியுள்ளார்

Related Articles

Latest Articles