15.6 C
New York
Sunday, October 25, 2026

2026 சுவிஸ் தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளையோர்களின் சாதனை

தற்போது லுட்சேர்ன் மாநிலத்தின் சூர்சே (Sursee) பகுதியில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சுவிஸ் நாடு தழுவிய 2026ம் ஆண்டுக்கான சுவிஸ் தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் ஜப்பான் கராத்தேதோ இத்தோசுக்காய் சுவிஸ் கிளையின் இரண்டு மாணவர்கள் குமித்தே பிரிவில் வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளார்கள்.


21 வயதுக்கு உட்பட்ட 61 கி.கி பெண்கள் பிரிவில் செம்பாய் ஸ்ரீபாலன் யதுசாலினி அவர்களும்,
84 கி.கி மேற்பட்ட ஆண்கள் பிரிவில் செம்பாய் சிவதாசன் ஜனகன் அவர்களும் மூன்றாம் இடங்களைப் பெற்று வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளனர்.

- Advertisement -


மூன்று சுவிஸ் கராத்தே லீக் போட்டிகளில் வெற்றியீட்டி சுவிஸ் தேசிய கராத்தே சுற்று போட்டிகளுக்காக நான்கு கராத்தே வீரர்கள் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கான விசேட பயிற்சிகளை சென்செய் கௌரிதாசன் ஷ்வப்தேஷ் அவர்கள் வழங்கியிருந்தார்.

Related Articles

Latest Articles