சுவிட்சர்லாந்தின் தெற்கு மாநிலமான டிசினோவில், சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் ஒரே கொசுவால் கடிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக, டிசினோ மாநில மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள், அதே இனத்தைச் சேர்ந்த பிற கொசுக்களால் கடிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
டிசினோ பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பிரிவுடன் (SUPSI) இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வளர்ந்த புலி கொசுக்களை (tiger mosquitoes) அழிக்கும் இரசாயனம் தெளிக்கப்பட்டதாக, டிசினோ மாநில மருத்துவ அதிகாரி ஜியோர்ஜியோ மெர்லானி தெரிவித்தார்.
புலி கொசுக்கள் தங்கள் வாழ்நாளில் 100 மீட்டருக்கு மேல் பறப்பதில்லை என்பதால், இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
மூலம்- swissinfo


