30 C
New York
Sunday, August 10, 2025

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 15ஆம் திகதி!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை தேர்தலை நடத்துவதற்காக, இந்த இரண்டு நாட்களையும் தேர்தல் ஆணையக்குழு பரிசீலித்து வருகிறது.

அரசியலமைப்பின் விதிகள் மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, இந்த ஆண்டு செப்ரெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அரசியலமைப்புச் சட்டப்படி, இந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகு வேட்புமனுத் தாக்கல் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

அறிவிப்பு வெளியான 16 முதல் 21 நாட்களுக்குள் ஒரு திகதியில் வேட்புமனுக்கள் பெறப்பட வேண்டும்.

அத்துடன், பிரச்சாரத்திற்கு குறைந்தபட்சம் 28 நாட்களும் அதிகபட்சம் 42 நாட்களும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles