11.1 C
New York
Wednesday, November 11, 2026

கொழும்பில் பயணிகள் ட்ரோன் சேவை- வானில் பறந்த அமைச்சர்கள்.

தெற்காசியாவின் முதலாவது வர்த்தக பயணிகள் ட்ரோன் சேவை இன்று கொழும்பு துறைமுக நகரில் பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட EHang E216 என்ற மின்சார ட்ரோன் மூலம் இந்தச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

- Advertisement -

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு ஆகியோர் முதலில் இந்த ட்ரோனில் பறந்து பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்தனர்.

பரீட்சார்த்த பயணங்களின் பின்னர் இந்த பயணிகள் சேவை கொழும்பு துறைமுக நகருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles