கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தின்போது நடைபெற்ற அதிகாரப்பூர்வ அரச விருந்தில், கத்தார் நாட்டின் முக்கியத் தலைவர்களின் மனைவியர் கலந்துகொள்ளாதது கவனத்தை ஈர்த்துள்ளது.
கத்தார் மன்னரின் இந்தப் பயணம், அந்நாட்டின் அரச தலைவர் ஒருவர் சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட முதலாவது அரசுமுறைப் பயணமாகும்.

சுவிஸ் தலைவர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு
பெர்னில் உள்ள Bernerhof ஹோட்டலில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்தில், சுவிஸ் ஜனாதிபதி கய் பார்மெலின் உள்ளிட்ட மத்திய அரசின் உறுப்பினர்கள் தங்களது வாழ்க்கைத் துணைகளுடன் கலந்துகொண்டனர்.
ஆனால் கத்தார் நாட்டிலிருந்து வந்த மன்னர் மற்றும் உயர்மட்ட அரசுப் பிரதிநிதிகள் தங்களது மனைவியர் இல்லாமல் தனியாகக் கலந்துகொண்டனர். இது பலரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது


