நீண்டகாலமாக நடைபெறும் ஸிபெலெமாரிட் திருவிழா, சுவிஸ் தலைநகர் பெர்னில் இன்று காலை தொடங்கியது. இந்த வெங்காயத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்தபோதிலும், அதிகாலை 4 மணிக்குச் சற்றுப் பிறகே தெருக்கள் உயிர்ப்புடன் காணத் தொடங்கின. முதல் பார்வையாளர்கள் பாராளுமன்ற சதுக்கத்தைக் கடந்து உலா வந்து, கலைநயத்துடன் பின்னப்பட்ட வெங்காயப் பின்னல்களைக் கண்டு வியந்தனர்.

ஸிபெலெமாரிட் திருவிழாவில், தொன் கணக்கில் வெங்காயம், பூண்டு, கரட், லீக்ஸ் மற்றும் கருப்பு சால்சிஃபி ஆகியவை விற்பனைக்கு உள்ளன. ஆனால், பார்வையாளர்கள் ஏராளமான கண்காட்சிக் கடைகளையும் திறந்தவெளி உணவுக் கூடங்களையும் காணலாம். அதிகபட்சமாக, மதியம் காகிதத் துண்டுகள் வீசும் போட்டி நடைபெறும் போது, கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
ஸிபெலெமாரிட் திருவிழா 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நடைபெற்று வருகிறது, மேலும் இது எப்போதும் நவம்பர் மாதத்தின் நான்காவது திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
மூலம்- swissinfo


