6.3 C
New York
Thursday, November 26, 2026

ரஷ்யாவின் 8.5 பில்லியன் பிராங்க் சொத்துகளை முடக்கிய சுவிட்சர்லாந்து.

ரஷ்யாவுக்குச் சொந்தமான 8.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்பிலான சொத்துகளை சுவிட்சர்லாந்து, முடக்கியுள்ளது. இது மார்ச் 2025 இறுதியில் 7.45 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்தது.

பொருளாதார விவகாரங்களுக்கான மாநிலச் செயலகம் (SECO), இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் திகதி நிலவரப்படி முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளின் மதிப்பைப் புதுப்பித்துள்ளது.

- Advertisement -

ரஷ்யாவுடன் தொடர்புடைய, பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான 14 சொத்துகள், அத்துடன் விளையாட்டு மற்றும் சொகுசு வாகனங்கள், விமானங்கள், கலைப் படைப்புகள், தளவாடங்கள் மற்றும் இசைக்கருவிகள் ஆகியவற்றையும் சுவிட்சர்லாந்து முடக்கியுள்ளதாக SECO தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியை ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் வெளியிட்டது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த அதிகரிப்புக்குக் கூடுதல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளைச் சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொண்டது மற்றும் தங்கம் போன்ற சொத்துகளின் மதிப்பு உயர்ந்தது ஆகியவை காரணங்களாகும்.

செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய, SECO-வின் பொருளாதாரத் தடைகள் பிரிவின் தலைவர் டேனியல் ஏபி (Daniel Aeby) இதனைத் தெரிவித்தார்.

தற்போது முடக்கப்பட்டுள்ள 8.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்பிலான சொத்துகளில், 1.65 பில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்பிலான சொத்துகள் தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்டுள்ளன என்று SECO இணையதளம் குறிப்பிடுகிறது. இவை இறுதி சட்ட ஆய்வு அல்லது உறுதியான முடிவு எடுக்கப்படும் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளனவே தவிர, நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்படவில்லை.

இதற்கிடையில், ரஷ்ய மத்திய வங்கிக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு, 18 மாதங்களுக்கு முந்தைய நிலையை விட 9% குறைந்து, 6.8 பில்லியன் சுவிஸ் பிராங்காக மாறியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நிதி விடுவிக்கப்பட்டதால் இது நிகழவில்லை என்றும், மாறாக இந்தச் சொத்துகள் பல்வேறு நாணயங்களைக் கொண்ட தொகுப்பாக (basket of currencies) வைக்கப்பட்டுள்ளதால், அந்த நாணயங்களின் மதிப்பு குறைந்ததே இதற்குக் காரணம் என்றும் டேனியல் ஏபி விளக்கினார்.

நவம்பர் மாதத் தொடக்கத்தில், ரஷ்யா மற்றும் பெலாரஸுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 21-வது பொருளாதாரத் தடைகள் தொகுப்பைச் சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், மேலும் 254 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன; மேலும், அவர்களுக்கு நிதி அல்லது பொருளாதார வளங்களை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு நிறுவனங்கள் பொருளாதாரத் தடைகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பே, சுமார் 2,790 தனிநபர்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இந்தத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles