4.6 C
New York
Wednesday, February 11, 2026

ஊர்காவற்றுறையில் குட்டையில் மிதந்த சிறுமிகளின் சடலங்கள்.

யாழ்ப்பாணம்-  ஊர்காவற்துறை, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள சிறிய நீர்நிலையில் இருந்து இரண்டு சிறுமிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரலு 8 மணியளவில் இந்தச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரண்டு சிறுமிகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுமிகளும், நேற்று மாலை சைக்கிளில் கடைக்கு சென்றிருந்தனர். அவர்கள் திரும்பி வராத நிலையில், தேடிச் சென்ற உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்களின் சடலங்களைக் கண்டுபிடித்தனர்.

இருவரும் சைக்கிளுடன் தவறுதலாக குட்டைக்குள் விழுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles