0.8 C
New York
Monday, December 29, 2025

பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைத்தவருக்கு சிறைத்தண்டனை.

 

பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு அழைப்பு மேற்கொண்ட  ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி, பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர்,  கினிகத்தேன பொலிஸ் நிலைய அதிகாரிகள் மது விருந்து நடத்துவதாக தெரிவித்தார்.

அந்தத் தகவலின் அடிப்படையில் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.பாரூக் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட போது, அது பொய்யான  தகவல் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, அவசர பொலிஸ் இலக்கத்திற்கு அழைப்பை எடுத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, சந்தேக நபரை நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மாவட்ட நீதிபதி எம்.பாரூக்தீன் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.

Related Articles

Latest Articles