-3.3 C
New York
Sunday, December 28, 2025

ஜெனிவாவில் வெறுப்புச் சின்னங்களுக்கு தடை – 85 வீத வாக்காளர்கள் ஆதரவு.

ஜெனிவாவில் பொது இடங்களில் நாஜி ஸ்வஸ்திகா போன்ற வெறுப்பு சின்னங்களை, தடை செய்வதற்கு ஆதரவாக, 85 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அரசியலமைப்பில் இந்த புதிய விடயத்தை உள்ளடக்குவது தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜெனிவாவின் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இதற்கு  ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்குப்பதிவில் 46வீதமான வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

இதன்மூலம், சுவிட்சர்லாந்தின் 26 கன்டோன்களில்,  சின்னங்கள் மற்றும் பிற வெறுப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தவோ அல்லது அணியவோ தடை விதிக்கும் முதல் மாநிலமாக ஜெனிவா திகழ்கிறது.

எனினும், சுவிட்சர்லாந்தில், கூட்டாட்சி மட்டத்தில் இத்தகைய தடை எதுவும் இல்லை.

ஆங்கில மூலம்- swissinfo

Related Articles

Latest Articles