18.8 C
New York
Wednesday, September 10, 2025

சிறார் திருமணத்துக்கு சுவிசில் வருகிறது கடும் கட்டுப்பாடு.

சுவிட்சர்லாந்து சிறார் திருமணம் தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக்கவுள்ளது.

கோடை விடுமுறை திருமணங்கள் என்று அழைக்கப்படும் திருமணங்கள், பொதுவாக எதிர்காலத்தில் செல்லுபடியாகாது.

இந்தச் சட்டமூலம் தொடர்பாக மாநிலங்கள் சபையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை, தேசிய சபை நேற்று தீர்த்துக் கொண்டுள்ளது.

ஒரு திருமணத்தின் போது மனைவி இன்னும் குறித்த வயதை எட்டாதவராக இருக்கும் சூழலில், சில விடயங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட நபரின் நலன்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் திருமணத்தை நடத்துவது அவசியம் என்று நீதிபதி கருதினால், இதுபோன்ற வழக்குகளில் திருமணத்தை நடத்தலாம் என மாநிலங்கள் சபை மற்றும் சமஷ்டி பேரவை என்பன ஆதரவாக பேசியுள்ளன.

தேசிய பேரவை முதலில் இந்த விலக்கு விதியை நீக்க விரும்பியது. எந்த விதிவிலக்குகளையும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியது.

ஆனால் புதன்கிழமை மாநிலங்கள் சபையுடன் அது இணங்கிப் போக முடிவு செய்துள்ளது.

இந்த சட்டமூலம் இரு அவைகளிலும் இறுதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

ஆங்கில மூலம் -The swiss times

Related Articles

Latest Articles