17.1 C
New York
Wednesday, September 10, 2025

இரண்டு பேரைப் பலியெடுத்த சுவிஸ் வெடிப்பு – வீடுகளுக்கு திரும்ப அனுமதி மறுப்பு.

சுவிஸ், நுஸ்பாமென் (Nussbaumen) கன்டோனில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் கீழ்த்தளத்தில் இருந்த வாகனத்தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீவிபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக கன்டோன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்தனர்.

நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வாகனத் தரிப்பிடத்தில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாகவும், அதையடுத்து முதல் தளத்தில் தீ பரவியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உடனடியாக பொலிசார், தீயணைப்பு பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் பெருமளவில் களமிறக்கப்பட்டதுடன், கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இரவு 11 மணியளவிலேயே தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் வீடுகளுக்கு  திரும்ப முடியாது என, கன்டோன் பொலிசார் தெரிவித்தனர்.

மூன்று மீட்பு ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீட்பு முயற்சிகளுக்கு ட்ரோன் ஒன்று இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதையடுத்து அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – swissinfo

Related Articles

Latest Articles