-0.1 C
New York
Sunday, December 28, 2025

இன்று தொடங்கும் உக்ரைன் அமைதி மாநாடு – சுவிஸ் இராஜதந்திரத்துக்கு சோதனை.

உக்ரைன் அமைதி மாநாடு சுவிற்சர்லாந்தின் பேர்கன்ஸ்ரொக் நகரில் இன்று ஆரம்பமாகிறது.

ரஷ்ய- உக்ரைன் போருக்கு அமைதித் தீர்வு காணும் நோக்கில், இந்த இரண்டு நாள் அமைதி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியும், பல்வேறு உலகத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க 160 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 90 நாடுகள் இதில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன.

ரஷ்யாவுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இது அர்த்தமற்ற முயற்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா அழைக்கப்படாததால் இந்த மாநாட்டில் சீனா, சவூதி அரேபியா போன்ற நாடுகளும் பங்கேற்க மறுத்துள்ளன.

எனினும் தென்னாபிரிக்கா,பிரேசில் ஆகிய நாடுகள் பங்கேற்க இணங்கியுள்ளன.

இந்த மாநாட்டை முன்னிட்டு, 4000 சுவிஸ் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுவிஸ் இராஜதந்திரத்தின் மிகவும் கடினமான மற்றும் முக்கியமான சோதனைகளில் ஒன்றாக இந்த அமைதி மாநாடு கருதப்படுகிறது.

ஆங்கிலம் மூலம் – swissinfo

Related Articles

Latest Articles