17.2 C
New York
Wednesday, September 10, 2025

சுவிஸ் முழுவதும் திரண்டெழுந்த பெண்கள்.

பெண்களின் உரிமைகளை  வலியுறுத்தி, சுவிசில் நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் பெண்கள் பாரிய பேரணிகளை நடத்தியுள்ளனர்.

அனைவருக்கும் சம ஊதியம், சம உரிமைகள் , சமமாக நடத்துவதை உறுதிப்படுத்தக் கோரியும் பெண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் பெண்கள் அமைப்புகள் இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

ஊதிய சமத்துவமின்மை காரணமாக தங்களின் ஓய்வூதியம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அனைத்து பிராந்தியங்களிலும் வெள்ளிக்கிழமை இந்தப் பேரணிகள் இடம்பெற்றன.

முக்கிய தேசிய அளவிலான பேரணி, பேர்னில் மாலை 6 மணிக்கு தொடங்கி நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமன்றி, ஆண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆங்கிலம் மூலம் –swissinfo

Related Articles

Latest Articles