பேர்கன்ஸ்ரொக்கில் உக்ரைன் அமைதி மாநாடு நேற்று ஆரம்பமாகிய நிலையில், உக்ரேனிய போர்க் கைதிகளை விடுவிக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளக் கோரி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
லூசெர்ன் ரயில் நிலையத்தின் முன்பாக, நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், 200 பேர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பலர் உக்ரேனிய கொடிகளுடன் காணப்பட்ட அதேவேளை, “உக்ரேனிய போர்க் கைதிகளைக் காப்பாற்றுங்கள்” என்று எழுதப்பட்ட டி-சேர்ட்களை அணிந்திருந்தனர்.
போர்க் கைதிகளுக்காக ஒரு நிமிட அமைதியும் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆங்கிலம் மூலம் – The swiss times