17.2 C
New York
Wednesday, September 10, 2025

குறைந்த வட்டி விகித்தில் கடன் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முறையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சியை நேற்று (19) திறந்து வைத்து உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வங்குரோத்தடைந்த நாடு

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் சிறிலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles