கனமழை காரணமாக, சேமாட்டில் (Zermatt) மோசமான வெள்ள இடர் ஏற்பட்டுள்ளது. விஸ்பா நதியின் வெள்ளத்தினால் கரைகள் நிரம்பி வழிகின்றன.
உள்ளூர் தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஓடைகளுக்கு அருகில் நிற்க வேண்டாம் என்றும், நகராட்சி எச்சரித்துள்ளது. பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கனமழையால் Zmutt அணையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆபரேட்டர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக நகராட்சி தெரிவிக்கிறது.
டாஸ் (Täsch ) இலிருந்து செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளன. நேற்றுக் காலை மண்சரிவினால், சேமாட் செல்லும் வீதி மூடப்பட்டது.
டிசினோ மற்றும் கிராபண்டன் கன்டோன்களில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது.
கிராபண்டனில் 6800 மின்னல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
க்ரோனோ ஜிஆரில் 120 மிமீக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வெள்ள அபாயம் காரணமாக லொசான் -பிரிக் (Lausanne-Brig) ரயில் பாதை ரிடெஸ் மற்றும் ஆர்டன் (Riddes- Ardon) இடையே மூடப்பட்டுள்ளதாக SBB ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக வலாய்ஸில் வெள்ளிக்கிழமை 230 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சிப்பிஸ் நகராட்சிப் பகுதியில் இருந்தே அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என கன்டோனல் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் அங்கு பணியில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
ஆங்கிலம் மூலம், – 20min