-0.7 C
New York
Sunday, December 28, 2025

சூரிச் பாடசாலையில் ஆசிரியை மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு.

சூரிச் நகரில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் பெண் ஆசிரியர் ஒருவரின் அத்துமீறல் செயற்பாடு குறித்து, ஊழியர் ஒருவர் மூலம் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகமும் மாவட்ட பாடசாலை நிர்வாகமும் உடனடியாக நகர பொலிஸ் குழந்தைகள் பாதுகாப்புத் துறையைத் தொடர்பு கொண்டு சூரிச் பிராந்திய தொடக்கப் பாடசாலை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

​​பாலியல் நேர்மைக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஆசிரியருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக, சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பொலிஸ் காவலில் உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை சட்டமா அதிபர் அலுவலகம் ஆராய்ந்து வருகிறது என, சூரிச் சட்டமா அதிபர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதேவேளை, ஆரம்ப பாடசாலை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர் விடுவிக்கப்பட்டார்  அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min.

Related Articles

Latest Articles