-0.7 C
New York
Sunday, December 28, 2025

சூரிச்சில் அதிகாலையில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் படுகாயம்.

சூரிச் – டோவ் (Dorf) பகுதியில் நேற்று அதிகாலையில் 2 மணியளவில் வீடு ஒன்றின் மேல் தளத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இதையடுத்து தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

வெடிப்பு  மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட இடிபாடுகளால் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாப தோட்டங்கள், பல்கனிகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளன.

கட்டடத்தில் இருந்த 13 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மாற்று இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வயதான ஒரு நபர் கடுமையான தீக்காயங்களுடன் ரேகாவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும், சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே, நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குடும்பம் அண்மையிலேயே அந்த வீட்டில் குடியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles