-3.3 C
New York
Sunday, December 28, 2025

நீச்சலில் ஈடுபட்டவர் மாயம் – ஹெலி மூலமும் தேடுதல்.

நேற்று மாலை லிம்மட்டில் நீச்சலில் ஈடுபட்டிருந்த ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார் என சூரிச் கன்டோனல் பொலிசார் உறுதி செய்தனர்.

லிம்மட்டில் நீச்சலில் ஈடுபட்டிருந்த ஒருவர் காணாமல் போனதை அடுத்து ஹெலிகொப்டர் ஒன்று தாழ்வாகப் பறந்து தேடுதலில் ஈடுபட்டது. சுழியோடிகளும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு 7:20 மணிக்கு லிம்மட்டில் நீராடும்போது ஒரு நபர் வெர்ட் தீவுக்கு அருகில் காணாமல் போனதாக சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்துக்கு உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வெய்னிங்கன் நகராட்சியில் உள்ள ஃபர்வீட் என்ற இடத்தில் ஒரு இறங்குதுறையில், 31 வயதான  நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles