19.8 C
New York
Thursday, September 11, 2025

டொரினாசில் நேற்றிரவு பற்றியெரிந்த வீடு – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

டொரினாசில், (Dürrenäsch) நேற்று இரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசாரும், தீயணைப்பு வீரர்களும், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டதை ஆர்கோ கன்டோனல் பொலிசார் உறுதிப்படுத்தினர்.

தீவிபத்தினால் எழுந்த புகை பள்ளத்தாக்கு முழுவதும் பரவியதுடன், வெடி சத்தமும் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.30 மணியளவில் மீட்புப் பணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தீயணைப்புப் படையினர் வந்து பார்த்தபோது, ​​ வீடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது என்றும் ஆர்கோ கன்டோனல் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

வீட்டில் இருந்த மூன்று பேர், உயிர் தப்பிய போதும், புகையை சுவாசித்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles