0.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச் ரயிலில் பற்றிய தீ – உயிர் தப்பிய பயணிகள்.

சூரிச் Stadelhofen ரயில் நிலையம் அருகே நேற்று மாலை,  Forchbahn ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் நெரிசல் மிக்க  மாலை நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, மீட்பு மற்றும் தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்பட்டனர்.

பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டதுடன், தீ அணைக்கப்பட்டதால் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

ரயிலின் ஓட்டுநர் முன்மாதிரியான முறையில் செயற்பட்டு, பயணிகளை விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தினார் என்றும், தீயணைப்பு படை வீரர்கள் ரயில் பெட்டியை பாதுகாத்து தீயை அணைத்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால், Stadelhoferplatz  பகுதியாக மற்றும் தற்காலிகமாக மூடப்படப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles