16.3 C
New York
Friday, September 12, 2025

சூரிச்சில் ரயில் நிலையத்தில் திடீர் தேடுதல் – ஒருவர் கைது.

Stadelhofen  ரயில் நிலையத்தில் நேற்று மாலை பொலிஸ் தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பல ரோந்து கார்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச் நகர பொலிஸ் அங்கு ஒரு ஒரு நடவடிக்கை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியது.

மாலை சுமார் 5.30 மணியளவில் அந்த நடவடிக்கை  தொடங்கியதாகவும், குற்றம் தொடர்பாக ஒரு நபர் சோதனையின் போது கைது செய்யப்பட்டார் என்றும் சூரிச் நகர பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை விபத்து அல்ல. ரயில்வேயும் இதில் ஈடுபடவில்லை. தற்போது நடவடிக்கை முடிந்துள்ளது.

நேற்று மாலை சோதனை செய்யப்பட்ட நபரைப் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க முடியவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles