-0.7 C
New York
Sunday, December 28, 2025

நீர் வீழ்ச்சியில் விழுந்தவர் சடலமாக மீட்பு.

Brübach மற்றும் Henau இடையே, Thur பாலத்தின் அருகே ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக St. Gallen கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நீர்வீழ்ச்சியில் ஐந்து பேர் குளித்துக் கொண்டிருந்தனர் என்றும், அவர்களில் Thurgau பிராந்தியத்தில் வசிக்கும் 30 வயதான ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நான்கு பேர் ஆபத்தான சூழ்நிலையால் அந்த நபரைக் காப்பற்ற முடியவில்லை.

பல மீட்பு அமைப்புகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், சடலமாக அவர் மீட்கப்பட்டுள்ளார்.

மூலம்-20min

Related Articles

Latest Articles