2 C
New York
Monday, December 29, 2025

இளம்பெண் அரசியல்வாதியை அச்சுறுத்தியவருக்கு தண்டம்.

Muri இல் உள்ள பேரவைக்கு போட்டியிடும் இளம் SVP அரசியல்வாதியான Vivienne Huber (23) ஐ சமூக ஊடகத்தில் அவமதித்து அச்சுறுத்திய ஒருவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

Vivienne Huber சமூக ஊடகங்களில் நட்பற்ற, அவமானகரமான அல்லது பாலியல் கருத்துகளை அடிக்கடி எதிர்கொள்கிறார்.

ஏப்ரலில், அவர் ஆபாசமான மற்றும் அவமானகரமான குறிப்பாக அவரது தோற்றத்தைப் பற்றிய கருத்துக்களை எதிர்கொண்டிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவு இன்னும் மோசமானதாக இருந்தது. அந்த வீடியோவில், ஒரு நபர் அவரை கடுமையாக திட்டியதுடன், தெளிவான மிரட்டல்களையும் விடுத்துள்ளார்.

Vivienne Huber க்கு தனது ஐடியின் படத்தை அனுப்பி, அவரைப் முறைப்பாடு செய்யும்படி வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அந்த நபர் குறித்து அவர் முறைப்பாடு செய்தார்.

லூசெர்ன் மாகாண நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து  தண்டனையை அறிவித்துள்ளது.

குறித்த நபர், அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் 1200 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும்.

நீதிமன்றச் செலவு 500 பிராங்குகளையும் அவர் செலுத்த வேண்டும்.

10 நாட்களுக்குள் தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டால், அது சட்டப்பூர்வமான தீர்ப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles