Wangen இல் சிறிய விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் Wangen விமான நிலையப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
52 வயதுடைய விமானி ஒருவர் சிறிய விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றார்.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரால் ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க முடியாமல் போனது.
இதையடுத்து விமானம் ஓடுபாதைக்கு அப்பால், உள்ள புல்வெளியில் தரையிறங்கியது. விமானம் பலத்த சேதமடைந்தது.
அதில் இருந்த விமானி மற்றும் இரண்டு பயணிகள் காயங்களின்றி தப்பினர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இதனால், விமான நிலையம் சுமார் மூன்று மணி நேரம் மூடப்பட்டது.
மூலம்- zueritoday

