6.8 C
New York
Monday, December 29, 2025

பியோஜோ மேயர் கைது.

Bioggio நகரின் மேயர் Eolo Alberti கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதுடைய இவர்,  கிரான்ட் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினராவார்.

நேர்மையற்ற முறையில் தனியார் நிறுவனத்தில் தொழில் நடத்தியதாக இவர் மீது சட்டமா அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.

Eolo Alberti  மீது சட்டமா அதிபர்  நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அவர் ஏற்கனவே புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

65 வயது முதியவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு சட்டமா அதிபர் நீதிபதியிடம் கோரிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த நிறுவனம், மற்றும் அதன் கணக்காளரும் விசாரணையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2004 இல், Cimo மேயராக இருந்தபோது, ​​ Eolo Alberti  ஏற்கனவே போலி மருத்துவர்களுடனான ஒரு விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டிருந்தார்.

பொய்யான சான்றிதழைப் பெற்று மோசடி செய்ததற்காக நீதிமன்றம் அவருக்கு 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை விதித்தது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles