2 C
New York
Monday, December 29, 2025

Basel நகர சபைக்கு 870 வேட்பாளர்கள் போட்டி.

Basel நகர சபைக்கு ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட 16 பட்டியல்களில் 870 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கன்டோனல் நாடாளுமன்றத்தில் உள்ள 100 இடங்களுக்குப் போட்டியிடும், 870  வேட்பாளர்களில் 537 ஆண்களும் 333 பெண்களும் அடங்குகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் பெண்களின் வீதம், 38.3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

மொத்தம் 96 தற்போதைய உறுப்பினர்கள், மீண்டும் தேர்தலில் நிற்கின்றனர்.

அதேவேளை, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட கன்டோனல் அரசாங்கத்திற்காக, 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என ஜனாதிபதி விவகாரங்களுக்கான Basel திணைக்களம் இன்று அறிவித்தது.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles