20.1 C
New York
Wednesday, September 10, 2025

சுவிசில் சோர்வாக இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்.

சுவிஸ் மக்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் சோர்வாக இருப்பதாக உணர்கிறார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 15% பேர் மட்டுமே தற்போது தங்கள் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுகாதார காப்புறுதி நிறுவனமான CSS நேற்று இந்த ஆய்வு முடிவை வெளியிட்டது.

இதன்படி,  35% மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது முற்றிலும் ஆரோக்கியமாக இல்லை என்று உணருவதாக தெரிவித்துள்ளனர்.

பதிலளித்தவர்களில் 68%மானவர்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இது புதிய தொற்றுநோய் என்று சொல்லலாம்.

ஆய்வின் முடிவுகளின்படி, கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட சுவிஸ் மக்கள் இன்னும் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறார்கள்.

இது பெரும்பாலான 18 முதல் 36 வயதுடையவர்களுக்குப் பொருந்தும்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles