20.1 C
New York
Wednesday, September 10, 2025

பாலியல் தொழிலை தடை செய்யும் உத்தரவு ரத்து.

சில முக்கிய இடங்களில் இருந்து,  100 மீட்டர் சுற்றளவிற்குள் பாலியல் தொழிலைத் தடை செய்யும்  Lucens நகரத்தின் தீர்மானத்துக்கு எதிராக Lausanne இல் உள்ள பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னர் முதியோர் இல்லம் அமைந்திருந்த  கட்டடத்தை பாலியல் தொழில் விடுதியாக மாற்ற விரும்பும் ஒரு நிறுவனம், மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Lucens நகர மாநகராட்சி  துணைச் சட்டத்திற்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

உணவுகங்கள், மருத்துவர்களின் அறுவை சிகிச்சைகள், குழந்தைகள் காப்பகங்கள், பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் இந்த விடுதியை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில பாலியல் விடுதி அமைப்பதற்கான தடை மிகவும் அதிகமானது என்று பெரும்பான்மையான நீதிபதிகள் தெரிவித்ததுடன், இது வணிகச் சுதந்திரத்திற்கு முரணானது என்றும், நகராட்சிப் பகுதியின் பெரும்பகுதியிலிருந்து விபச்சாரத்தை விலக்குகிறது என்றும் கூறி, இந்த துணைச் சட்ட விதி ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles