20.4 C
New York
Monday, August 17, 2026

பஸ் மீது மோதியது ட்ராம்- போக்குவரத்து பாதிப்பு.

சூரிச் HB இல் உள்ள Walche பாலம் அருகே இன்று காலை,  டிராம் ஒன்று பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இன்று காலை 11 மணிக்கு சற்று முன்னர், சூரிச் பிரதான நிலையத்தில்  இந்த விபத்து  ஏற்பட்டது.

Walche பாலத்தில் இருந்து வந்த பஸ் மீது லைன் 13ல் வந்து கொண்டிருந்த டிராம் மோதியது.

இந்த விபத்தினால்,  இதனால் பொதுப் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதுடன், மாற்றுப்பாதைகளுக்கும் திருப்பி விடப்பட்டன.

Escher-Wyss-Platz பாதையில் 4, 11, 13, 14 மற்றும் 17 ஆகிய பாதைகளில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயங்கள் ஏற்பட்டதா என பொலிசார் தகவல் வெளியிடவில்லை.

எனினும் ஒருவர் அம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles