2.1 C
New York
Thursday, February 12, 2026

பச்சையாக மாறிய தலைமுடி- குடிநீர் மாசுபாட்டால் வந்த வினை.

கடந்த வியாழன் மதியம் என் மனைவி குளித்துக் கொண்டிருந்த போது, ​​​​அவளுடைய தலைமுடி திடீரென பச்சை நிறமாக மாறியது, அவளுடைய தோல் மற்றும் கண்கள் எரிய ஆரம்பித்தன, என்று ஜெனிவா நகரசபையான கரூஜில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் வசிப்பவர் தெரிவித்துள்ளார்.

அவர் மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்படட போதும் இன்னும் வயிறு மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

தானும் சிலரும் குழாய் தண்ணீரைக் குடித்த பின்னர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாகக் கூறினார்.

மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் வாந்தி எடுத்தார், மேலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சில வீடுகளில் உள்ள குடிநீரில் இரசாயனம் கலந்ததே இந்த மர்ம நோய்களுக்கு காரணம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன்டோனல் இரசாயனவியலாளரின் அறிவுறுத்தல்களின்படி, தனிப்பட்ட சுகாதாரத்திற்காகக் கூட, மறு அறிவிப்பு வரும் வரை, குழாய்களில் உள்ள தண்ணீரை உட்கொள்ளவோ ​​அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாசுபாட்டினால் 90 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles