குண்டு மிரட்டல் விடுத்த ஒருவரை Solothurn கன்டோனல் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஹெசோ இலையுதிர்கால கண்காட்சியை (Heso autumn fair) இலக்காகக் கொண்டு, இந்த குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
- Advertisement -

இதையடுத்து, அந்த பகுதியை சுற்றிவளைத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிசார் சோதனையிட்டனர்,
ஆனால் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை.
பொலிசாரின் விசாரணையின் போது, அச்சுறுத்தல் விடுத்ததாக கண்டறியப்பட்ட 72 வயதான சுவிஸ் பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம் -Bluewin


