16.6 C
New York
Wednesday, September 10, 2025

சுகாதார காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு.

2025 ஆம் ஆண்டில் சுவிஸ் சுகாதார காப்புறுதி கட்டணங்கள்  சராசரியாக 6%  அதிகரிக்கவுள்ளது.

சராசரி மாதாந்த கட்டணம்,378.70  பிராங்காக  இருக்கும் என்று பொது சுகாதார மத்திய அலுவலகம் (FOPH) கூறுகிறது.

இந்த அதிகரிப்பு இந்த ஆண்டு இடம்பெற்ற 8.7%  அதிகரிப்பை விட குறைவானது.

சராசரி மாதாந்த கட்டணம்,  சுவிட்சர்லாந்தில் செலுத்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் சேர்த்து, காப்புறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையால் பிரித்து கணக்கிடப்படுகிறது.

பெரியவர்களுக்கான கட்டணம், 2025 இல்  449.20  பிராங்கில் இருந்து 25.30  பிராங்கினால் அதிகரிக்கும்.

இளைஞர்கள், தற்போதுள்ள 314.10. பிராங்கை விட 16.10  பிராங்  மேலதிகமாக  செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான சராசரி கட்டணம் 117.90 பிராங்கில் இருந்து 6.50  பிராங்கினால் உயரும்.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles