16.5 C
New York
Wednesday, September 10, 2025

சாவுக் கருவியை பயன்படுத்தியவருக்கு விளக்கமறியல்.

சுவிட்சர்லாந்தில் சார்கோ உயிர்மாய்ப்பு இயந்திரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று Schaffhausen கன்டோன், சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற மேலதிக விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது உதவி செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டமா அதிபர் அலுவலகம் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

சார்கோ இயந்திரத்துக்கு பின்னால் உள்ள ‘தி லாஸ்ட் ரிசார்ட்’, என்ற அமைப்பு, இந்த வாரம் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.

அமைப்பின் இணைத் தலைவர் ஃப்ளோரியன் வில்லெட்,  இரண்டு சட்டத்தரணிகள் மற்றும் ஒரு டச்சு புகைப்படக் கலைஞர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை Merishausen அருகிலுள்ள காட்டில் சாவுக் கருவியைப் பயன்படுத்தி அமெரிக்க பெண் ஒருவர் உயிரை மாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles