17.5 C
New York
Wednesday, September 10, 2025

சைக்கிள் ஓட்ட போட்டியில் விபத்து- வீராங்கனை படுகாயம்.

சூரிச் சைக்கிள் ஓட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது Egg ஐ சேர்ந்த 18 வயதான Muriel Furrer  மோசமான விபத்தில் சிக்கினார்.

நேற்று நடந்த விபத்தில் காயமடைந்த அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூனியர் பெண்கள் பிரிவில் போட்டியின் போது இந்த விபத்து ஏற்பட்டது.

மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  Muriel Furrer  கடுமையான தலையில் காயம் அடைந்தார்.  மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு  ஏற்கனவே ஒரு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles