20.1 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச் விழாவில் ரஷ்ய திரைப்படம் திரையிடப்படுவது ரத்து.

சூரிச் திரைப்பட விழாவில் ரஷ்ய-கனடிய திரைப்பட தயாரிப்பாளர் Anastasia Trofimova வின் சர்ச்சைக்குரிய ஆவணப்படமான Russians at War  திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச் திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழு நேற்று  மாலை  இதனை அறிவித்தது.

பார்வையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், Anastasia Trofimova வின் திரைப்படம்  ஆவணப்படப் போட்டியில் தொடந்திருக்கும் என  X தளத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஒரு ரஷ்ய இராணுவப் பிரிவுடன் பல மாதங்கள் இணைந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்,  உக்ரேனியர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

அச்சுறுத்தல்கள் காரணமாக ரொறன்ரோ திரைப்பட விழாவில் இது திரையிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles