-0.7 C
New York
Tuesday, December 30, 2025

எதிர்பாராத நிலைமைகளை எதிர்கொள்ள அவசர கையிருப்புடன் தயாராகுங்கள்.

இயற்கை பேரழிவுகள் அல்லது விநியோக பற்றாக்குறை போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் சுவிட்சர்லாந்தில் கூட எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

 நன்கு திட்டமிடப்பட்ட, அவசரகால  கையிருப்பின் மூலம், நெருக்கடியை சில நாட்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் கடப்பதற்கு உதவும்.

எனவே, உங்கள்  வீட்டு கையிருப்பை உருவாக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

ஒக்டோபர் 8ஆம் திகதி , தேசிய பொருளாதார விநியோகம் (AEP) அவசரகால கையிருப்புகளை பேணுவது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும்  தேசிய தகவல் பிரச்சாரத்தை கன்டோன்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் நெருங்கிய ஒத்துழைப்புடன், தொடங்கியுள்ளது.

முடிந்தவரை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எதிர்பாராத நிகழ்வுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு அவர்களை ஊக்குவிப்பதும்  இதன் நோக்கமாகும்.

கணிக்க முடியாத உலகில், நெருக்கடிக்குத் தயாராக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

இயற்கை பேரழிவுகள், மின் தடைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள், கடினமான சூழ்நிலைகளுக்கு தயாராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

ஒரு சில நாட்களுக்கு தன்னிறைவை உறுதிப்படுத்துவது,  ஒரு பயனுள்ள இலகுவான நடவடிக்கையாகும்.

வீட்டுக்கான அடிப்படைத் தேவையானவற்றில், ஒரு வாரத்திற்குப் போதுமான உணவுப் பொருட்கள்,  கையிருப்பில் இருக்க வேண்டும்.

தண்ணீர் அவசியம். ஒரு நபருக்கு குறைந்தது 9 லிட்டர் படி, மூன்று நாட்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

சுகாதாரப் பொருட்கள், தனிப்பட்ட மருந்துகள்,  பற்றறிகள் போன்ற ஆற்றல் மூலங்கள்  மற்றும்  பணமும் சேமித்து வைக்க  வேண்டும்.

இதற்கான திட்டமிடலை  இலகுபடுத்துவதற்காக, தேசிய பொருளாதார விநியோகத்துக்கான  பெடரல் அலுவலகம் (FONES) அவசரகால கையிருப்பு கல்குலேட்டருடன் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது:

இந்த தளத்திற்குச் சென்று அதனை பயன்படுத்த முடியும். (www.bwl.admin.ch/en/emergency-stock-calculator)

இந்த  கல்குலேட்டரைக் கொண்டு, உங்கள் வீட்டு கையிருப்பில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களுக்கான கொள்வனவுப் பட்டியலை நீங்கள்  உருவாக்கலாம்.

கல்குலேட்டர் உங்கள் வீட்டின் அளவு, உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் ஏதேனும் சிறப்புத் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

இது குடும்பங்கள், ஒற்றையர் அல்லது சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கான அவசரகால கையிருப்புகளை பேணுவதை இன்னும் இலகுபடுத்தும்.

மூலம் –  blog.alertswiss.ch/

Related Articles

Latest Articles