14.6 C
New York
Sunday, September 27, 2026

யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு

வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டின் உரிமையாளர்கள் சிறுமிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து , சிறுமியை மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வந்ததாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

- Advertisement -

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி , வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17), என்றும் அவர் குறித்த வீட்டில் தங்கியிருந்து கடந்த நான்கு மாத காலமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles